Thursday, April 9, 2009

அட!!!! நம்மளையும் நாலு பேரு பாலோ பண்றாங்கப்பா!!!!


ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது எப்படின்னு
ஒரு பதிவு போட்டாலும் போட்டேன். அது கடைசியில நமக்கே ஆப்பு வச்சிட்டுது. எல்லோரும் ஒரு நாள் வெட்டியா கலாய்ச்சிக்கிட்டு இருக்கும் போது, நம்ம மேலாளர் அத்தனை பேருக்கும்முன்னால வச்சு எல்லோரும் சும்மா இருக்கும் போது உருப்படியா எதாவது பண்ணனும் இப்போ விவேக்க பாரு பிளாக் எழுதறான் அது மாதிரி எல்லோரும் ஏதாவது புதுசா பண்ணனும் அப்படின்னு பிட்ட போட்டுட்டாரு..


இது பாராட்டா இல்ல ஆப்பான்னு புரியாம எதுக்கும் கொஞ்சம் அடக்கியே வாசிக்கலாம்னு ஒருசிறிய இடைவேளை விட்டுட்டேன்..

திரும்பவும் வந்து பார்த்தா நம்மளையும் நாலு பேரு பாலோ பண்றாங்கப்பா !!!
நன்றி நண்பர்களே!!!

சரி பொறுப்பா மறுபடியும் எழுத ஆரம்பிக்கலாம்!!! எடுடா பேனாவ !!! தட்டுடா கற்பனை குதிரைய !!!



தேடல்


சலனங்களால் மோகம்
வந்து அடிக்கடி தேகத்தை சூடேற்றியது


சில இடறல்களில்
மனம் வெறி கொண்டு
அலைந்தது


கண்கள்
தேடித்தேடி
எதையோ வெறித்துக்கொண்டிருக்கிறது


யாரைப் (எவளைப்) பார்த்தாலும்
சில நிமிடங்களில்
வாழ்க்கை ஒத்திகை பார்த்தது மனம்


மனிதனே இப்படித்தானோ??
எப்போதும் எதையாவது
தேடிக்கொண்டே....


தேடலுக்கு
அர்த்தம் தேடுகின்றேன்


மோகம் தீர்க்க ஒரு துணை வந்தால் கிடைக்குமோ ??
தேடித்தவிக்கும் இரு கரங்களுக்குள்
அடங்கினால் கிடைக்குமோ ??
தோழமையுடன் எண்ணங்கள்
பகிர்ந்தால் கிடைக்குமோ ?


அனைத்தும் கிடைத்தாலும்
வேறு ஏதாவதொன்றைத்
தேடத்தொடங்கும் மனது


முற்றும் துறந்தவரும்
தேடியலைந்து கிடைக்காதது
நான் தேடக் கிடைக்குமோ ??


தேடலுக்கு அர்த்தம்
இன்னும் தேடுகின்றேன்.........


பின்குறிப்பு :
யார் நம்மைப்பார்த்து புன்னகைத்தாலும் காதல் என்று எண்ணிக்கொண்டு பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்து திரிந்த
கல்லூரி நாட்களில் விடுதி அறையில் சன்னலோரத்தில் பிரசவித்த கவிதை. அழகப்பா பல்கலை விடுதி சன்னலில் இருந்து பார்த்தால் MSW, Women Studies பிரிவுகளின்
பட்டாம் பூச்சிகள் நடந்து வருவது தெரியும்.....