Saturday, January 15, 2011

நகரத்தில் பொங்கல்



பெரிய வாசல்களில் இட்ட கோலங்கள்
சுருங்கி புறாக்கூண்டு வீட்டு வாசல்களில்
விறகு அடுப்பின் சூரியப்பொங்கல்
இன்று எரிவாயு அடுப்பில்
மாட்டு வண்டி கட்டி ஆற்றுக்கு
பூப்பறிக்கும் நோன்புக்கு போனவர்கள்
கான்க்ரீட் காடுகளில்
நுரை பொங்க கறந்து பருகிய பால்
இன்று வீட்டு கதவில் பாக்கெட்டில்
இழந்தது கோடி இருந்தும்
நினைவுகளில் இருப்பதை வைத்து
நகரும் நகர வாழ்க்கை!!! 

Friday, June 4, 2010

அய்யய்யோ!!! அந்த பயங்கரமான மிருகம் பக்கத்துல வந்திருச்சு எல்லோரும் ஒடுங்க!!! ஒடுங்க!!!

 கிங் காங் பார்ட் 2  - இந்தியில்

விஷயத்த கீழே கொடுத்திருக்கிற சேதிய படிச்சு தெரிஞ்சுக்குங்க...  பஞ்சாபில இருக்கிற சிங் பாடகரெல்லாம் பொட்டிய தூக்கிட்டு ஓடிர வேண்டியதுதான்.. தலேர் மெகந்தி, இன்னும் பிற பிரபல பாடகர்களெல்லாம் கிலி அடிச்சி கிடக்கிறாங்க... சல்மான் கான், ஷாருக்கான் எல்லோரும் ரூம் போட்டு உட்கார்ந்து யோசிக்கறாங்களாம்.. கலைஞர் இப்பவே சோனியாவுக்கு போன் பண்ணி இன்னொரு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தா இந்த பிரச்சினைய பேசி தீர்த்துக்க்கலாம்னு சொல்லிட்டாராமே!!!

கூடவே கொஞ்சம் வீடியோவையும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க!!!

அப்பவே வீராசாமி படத்தில இந்தியில "அபி தேக்கோ" அப்படின்னு வசனம் பேசி தன்னோட இந்தி பட ஆர்வத்த சொல்லிருக்காரு நாமதான் சரியா புரிஞ்சிக்கல!!!


 இந்த கொடுமையெல்லாம் இந்தியா லெவலுக்கு போக போகுது !!! இதனால எப்படியும் இந்தியா வல்லரசு நாடா கண்டிப்பா ஆயிடும்!!!


 செய்தி 
நன்றி தினமலர்


திரைப்படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசி பிரபலமானவர் நடிகர் விஜய் டி.ராஜேந்தர். உயிருள்ளவரை உஷா, மைதிலி என்னைக்காதலி, உறவைக் காத்த கிளி, மோனிசா என் மோனலீசா, வீராசாமி உள்ளிட்ட பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் ராஜேந்தருக்கு அவருடைய தாடியும் அடையாளத்தை கொடுத்தது. ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த ராஜேந்தர், இப்போது தனது பார்வையை பாலிவுட் பக்கம் பதிக்கப் போகிறாராம். இதற்காக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஜிம்முக்கு சென்று உடம்பை ஸ்லிம் ஆக்கிக் கொண்டிருக்கிறாராம். அதோடு இந்தியும் படித்துக் கொண்டிருப்பதாக சொல்கிறது கோடம்பாக்கத்து தகவல்.

தமிழ் சினிமாவைப் போலவே இந்தியிலும் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, தயாரிப்பு என ஏழெட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்ய திட்டமிட்டிருக்கும் ராஜேந்தர், இந்தி படத்தில் பஞ்சாபி பாடகர் வேடமேற்கப் போ‌கிறாராம். அதற்காக சிங் கெட்-அப்பில் சமீபத்தில் போட்டோ‌செஷன் முடித்திருப்பதுடன், பாடல்கள் கம்போஸ் பணிகளையும் முடித்து விட்டாராம். "பொதுவா பாலிவுட்ல இந்த ஸ்டைலில் யாரும் படம் எடுத்ததும் இல்ல. நடிச்சதும் இல்ல" என்று சொல்லும் டி.ஆர்., பாலிவுட்டுக்காக தனது ஸ்டைலில் இருந்து மாறவே மாட்‌டேன். எனது அடுக்குமொழி ஸ்டைல் பாலிவுட்டிலும் தொடரும், என்றும் கூறியிருக்கிறார். 

Tuesday, May 18, 2010

கேள்விகளால் ஒரு உலகம்



நமக்கெல்லாம் யாராவது ஒரு கேள்வி கேட்டாலே நம்மை குற்றம் சொல்கிறார்களோ என்று ஒரு நினைவு மனதுக்குள் ஓடாமல் இல்லை. கேட்கிற கேள்விக்கு பதில் தெரியாவிட்டாலும் எதாவது ஒரு பதிலை சொல்லி சமாளித்த காலங்கள் பல...
கல்லூரியில், நேர்முகத்தேர்வில், மேலாளரிடத்தில், உடன் பணிபுரிபவர்களிடத்தில்.. என்று நீளும் பட்டியல்.

பதில் இல்லை என்றால் ஏன் சும்மா தொனத்தி எடுக்கிறே? என்று ஆரம்பித்து தங்கமணியோடு சண்டையில் போய் முடிந்த தருணங்கள் கணக்கில் அடங்காதவை...

ஆனாலும், கேள்விகளாலேயே ஒரு உலகம் உண்டு!! யாழினியின் உலகம்!!!  
யாழினி என் மூன்றரை வயது குட்டி தேவதை...
என் குட்டி தேவதையின் உலகம் இப்போதெல்லாம் கேள்விகளாலேயே நிரப்பப்பட்டிருக்கிறது.


எனக்கும் அவளுக்கும் நடந்த ஒரு உரையாடல்

நீ நெறைய கீரை சாப்பிடனும், காய் கறி சாப்பிடனும் 
யாழினி: ஏன் ?
அப்போதான் முடி நிறைய வளரும்
யாழினி: வளர்ந்தா? 
பார்க்க அழகா இருப்பிங்க
யாழினி:இருந்தா?
ஹெல்த்தியா இருக்கலாம் 
யாழினி: எதுக்கு?
நல்லா படிக்கலாம்
யாழினி: படிச்சு?

இப்படி வடிவேல் நகைச்சுவை மாதிரி நீண்டு கொண்டே போகும் கேள்விகள். நான் சலித்து போய் பதில் சொல்வதை நிறுத்தினால் ஒழிய அவள் நிறுத்துவதில்லை.. திடீரென்று அவள் பொம்மைகளுக்கு பதிலாய் எனக்கு அறிவுரைகள் திரும்ப வரும். நீ நல்லா கீரை சாப்பிடனும் அப்போதான் முடி வளரும்.. எல்லா காயும் சாப்பிடனும்.. என்று கூறி விட்டு எனக்கு சோறு ஊட்டி விடுவாள். அவளுக்கு தெரியாது என் வழுக்கையில் இனி என்ன கீரை சாப்பிட்டாலும் முடி வளராது என்று.... அவள் கையில் பொம்மையாய் மாறிப்போனதில் நான் என்னுள்ளே தொலைந்து போனேன்.


கேள்விகள் இதோடு நின்று விடுவதில்லை.. பார்ப்பது எல்லாவற்றிக்கும் புதிது புதிதாய் ஒரு கேள்வி தொக்கித்தான் நிற்கிறது. ஆனாலும் பதில் சொல்ல ஏனோ அலுப்பதில்லை!! அவளின் கேள்விகள் இல்லாமல் நாட்கள் நகர்வதில்லை...


 அவளின் கேள்விகளுக்கு விடை தேடுவதில் நான் புதிதாய் கற்று கொள்வது எத்தனையோ!! பொறுமையும் சேர்த்து!!
.

Tuesday, May 4, 2010

புகைப்படங்கள்


எப்போதாவது திருப்பிப்பார்க்கும்
பழைய புகைப்படங்கள்
நினைவு படுத்துவது...

பள்ளி நண்பர்களை
கல்லூரி நண்பர்களை
அலுவலக நண்பர்களை
பக்கத்து வீட்டு நண்பர்களை...

மகிழ்ச்சியான எத்தனையோ பயணங்களை
புகை வண்டியில் கூட பயணித்தவர்களை...

சொல்ல மறந்த
சொல்லாமல் விட்ட காதல்களை
இன்னும் எத்தனையோ நினைவுகளை...

கடைசியில் மிஞ்சி நிற்பது ஒரே ஒரு கேள்விதான்???
இதில் எத்தனை பேர் நம்மோடு தொடர்பில்?

நட்பு எப்போதும் 
புகை வண்டி பயணம் மாதிரி
ஆட்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்
வண்டி மட்டும் 
நிற்காமல் ஓடிக்கொண்டே... 

Tuesday, April 13, 2010

உலக கோப்பை இந்தியா சாம்பியன்

உலக கோப்பை இந்தியா சாம்பியன்

என்னடா இது உலக அதிசயம் இப்போ ஐ பி எல் தானே நடக்குது கிரிக்கெட் உலக கோப்பை போட்டிக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்குதே!! மண்டைக்குள்ளே பொறி பறக்குதா?? நம்முடைய பாரம்பரிய விளையாட்டான கபடியில் இந்தியா 58-24 என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது...சொல்லி வச்ச மாதிரி எல்லா பத்திரிக்கையிலும் ஒரு மூலையில் இந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது....  



இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னால் பெற்ற வெற்றிகள் 

http://www.kabaddiikf.com/2cswckc.htm
 

இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கலாமே என்கிற ஆதங்கம் மனதின் ஓரம் இல்லாமல் இல்லை.. அதையும் காமெடி ஆக்கிடுவோம் !!!

இந்திய கபடி அணிக்கு அரசியல் தலைவர்களின் வாழ்த்து செய்திகள்.. 

தலைவர் கலைஞர்
உடன்பிறப்பே!!! இது கழக ஆட்சியின் மற்றுமொரு மைல் கல்!!  அடங்காத  ஏறு போல் பாகிஸ்தான் அணியின் மீது  பாய்ந்து வெற்றி கனியினை பறித்து தங்க மங்கை சோனியா மற்றும் அருமை அண்ணல் மன்மோகன் சிங் முன்னே தந்திட்டார்.. துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் தென்மண்டல அமைப்பாளர் அழகிரி இருவரும் இந்த வெற்றிக்காக அயராது பாடுபட்டனர். இது போன்ற ஒரு நிகழ்வு வேறு எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை!!! அணியின் வீரர்கள் அனைவரையும் அடுத்து வரும் இடைத்தேர்தலில் பணியாற்றி பரிசுகள் பெற அழைக்கிறேன்....

புரட்சி தலைவி செல்வி ஜெயலலிதா 
ரத்தத்தின் ரத்தமே!!! அதிமுக ஆட்சியின் போதுதான் கபடி அணி வீரர்களுக்கு கால் சட்டை வழங்கப்பட்டது அதற்கு முன் வரை அவர்கள் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டுதான் ஆடி கொண்டிருந்தனர்.. இது ஏதோ கருணாநிதியின் ஆட்சியின் சாதனை போல மார் தட்டி கொள்கிறார்கள்.. உண்மையில் அவருடைய குடும்பத்தில் இருந்து யாருமே விளையாட்டு துறை மந்திரியாக இல்லாததால்தான் இந்த வெற்றி !! சசி!! ஹெலிகாப்ட்டர் ரெடியா!! கொடநாட்டுக்கு விடு !!!

தமிழ் குடி தாங்கி மருத்துவர் இராமதாஸ்
இந்த வெற்றியை கொண்டாட முடியவில்லை!! இந்த அணியிலே வன்னியர் ஒருவர் கூட இடம் பெறவில்லை.. ஆகவே வன்னியர்களுக்கு அணியிலே இட ஒதுக்கீடு கோரி பிரதமர் அவர்களுக்கு அனைவரும் ஒரு கோடி தந்திகள் அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்..

 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு 
 இது கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!! அன்னை சோனியாவின் நல்லாசியும், பிரதமர் அவர்களின் முயற்சியுமே இந்த வெற்றிக்கு காரணம்!! தலைவர் கலைஞர் அவர்களின் ஒத்துழைப்பை இந்த நேரத்திலே பாராட்ட கடமைபட்டிருக்கிறோம்... 2012 காமராஜர்  ஆட்சி அமைப்போம் அப்போதும் கபடி அணி வெற்றி பெறும்!!!  


பின் குறிப்பு:-
ரொம்ப நாள் இடைவெளிக்கு பிறகு எழுதிய பதிவு பின்னூட்டம் போட்டு தொடர்ந்து எழுத ஊக்கம் கொடுங்கள் நண்பர்களே!!!

Thursday, April 9, 2009

அட!!!! நம்மளையும் நாலு பேரு பாலோ பண்றாங்கப்பா!!!!


ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது எப்படின்னு
ஒரு பதிவு போட்டாலும் போட்டேன். அது கடைசியில நமக்கே ஆப்பு வச்சிட்டுது. எல்லோரும் ஒரு நாள் வெட்டியா கலாய்ச்சிக்கிட்டு இருக்கும் போது, நம்ம மேலாளர் அத்தனை பேருக்கும்முன்னால வச்சு எல்லோரும் சும்மா இருக்கும் போது உருப்படியா எதாவது பண்ணனும் இப்போ விவேக்க பாரு பிளாக் எழுதறான் அது மாதிரி எல்லோரும் ஏதாவது புதுசா பண்ணனும் அப்படின்னு பிட்ட போட்டுட்டாரு..


இது பாராட்டா இல்ல ஆப்பான்னு புரியாம எதுக்கும் கொஞ்சம் அடக்கியே வாசிக்கலாம்னு ஒருசிறிய இடைவேளை விட்டுட்டேன்..

திரும்பவும் வந்து பார்த்தா நம்மளையும் நாலு பேரு பாலோ பண்றாங்கப்பா !!!
நன்றி நண்பர்களே!!!

சரி பொறுப்பா மறுபடியும் எழுத ஆரம்பிக்கலாம்!!! எடுடா பேனாவ !!! தட்டுடா கற்பனை குதிரைய !!!



தேடல்


சலனங்களால் மோகம்
வந்து அடிக்கடி தேகத்தை சூடேற்றியது


சில இடறல்களில்
மனம் வெறி கொண்டு
அலைந்தது


கண்கள்
தேடித்தேடி
எதையோ வெறித்துக்கொண்டிருக்கிறது


யாரைப் (எவளைப்) பார்த்தாலும்
சில நிமிடங்களில்
வாழ்க்கை ஒத்திகை பார்த்தது மனம்


மனிதனே இப்படித்தானோ??
எப்போதும் எதையாவது
தேடிக்கொண்டே....


தேடலுக்கு
அர்த்தம் தேடுகின்றேன்


மோகம் தீர்க்க ஒரு துணை வந்தால் கிடைக்குமோ ??
தேடித்தவிக்கும் இரு கரங்களுக்குள்
அடங்கினால் கிடைக்குமோ ??
தோழமையுடன் எண்ணங்கள்
பகிர்ந்தால் கிடைக்குமோ ?


அனைத்தும் கிடைத்தாலும்
வேறு ஏதாவதொன்றைத்
தேடத்தொடங்கும் மனது


முற்றும் துறந்தவரும்
தேடியலைந்து கிடைக்காதது
நான் தேடக் கிடைக்குமோ ??


தேடலுக்கு அர்த்தம்
இன்னும் தேடுகின்றேன்.........


பின்குறிப்பு :
யார் நம்மைப்பார்த்து புன்னகைத்தாலும் காதல் என்று எண்ணிக்கொண்டு பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்து திரிந்த
கல்லூரி நாட்களில் விடுதி அறையில் சன்னலோரத்தில் பிரசவித்த கவிதை. அழகப்பா பல்கலை விடுதி சன்னலில் இருந்து பார்த்தால் MSW, Women Studies பிரிவுகளின்
பட்டாம் பூச்சிகள் நடந்து வருவது தெரியும்.....