Tuesday, April 13, 2010

உலக கோப்பை இந்தியா சாம்பியன்

உலக கோப்பை இந்தியா சாம்பியன்

என்னடா இது உலக அதிசயம் இப்போ ஐ பி எல் தானே நடக்குது கிரிக்கெட் உலக கோப்பை போட்டிக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்குதே!! மண்டைக்குள்ளே பொறி பறக்குதா?? நம்முடைய பாரம்பரிய விளையாட்டான கபடியில் இந்தியா 58-24 என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது...சொல்லி வச்ச மாதிரி எல்லா பத்திரிக்கையிலும் ஒரு மூலையில் இந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது....  இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னால் பெற்ற வெற்றிகள் 

http://www.kabaddiikf.com/2cswckc.htm
 

இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கலாமே என்கிற ஆதங்கம் மனதின் ஓரம் இல்லாமல் இல்லை.. அதையும் காமெடி ஆக்கிடுவோம் !!!

இந்திய கபடி அணிக்கு அரசியல் தலைவர்களின் வாழ்த்து செய்திகள்.. 

தலைவர் கலைஞர்
உடன்பிறப்பே!!! இது கழக ஆட்சியின் மற்றுமொரு மைல் கல்!!  அடங்காத  ஏறு போல் பாகிஸ்தான் அணியின் மீது  பாய்ந்து வெற்றி கனியினை பறித்து தங்க மங்கை சோனியா மற்றும் அருமை அண்ணல் மன்மோகன் சிங் முன்னே தந்திட்டார்.. துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் தென்மண்டல அமைப்பாளர் அழகிரி இருவரும் இந்த வெற்றிக்காக அயராது பாடுபட்டனர். இது போன்ற ஒரு நிகழ்வு வேறு எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை!!! அணியின் வீரர்கள் அனைவரையும் அடுத்து வரும் இடைத்தேர்தலில் பணியாற்றி பரிசுகள் பெற அழைக்கிறேன்....

புரட்சி தலைவி செல்வி ஜெயலலிதா 
ரத்தத்தின் ரத்தமே!!! அதிமுக ஆட்சியின் போதுதான் கபடி அணி வீரர்களுக்கு கால் சட்டை வழங்கப்பட்டது அதற்கு முன் வரை அவர்கள் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டுதான் ஆடி கொண்டிருந்தனர்.. இது ஏதோ கருணாநிதியின் ஆட்சியின் சாதனை போல மார் தட்டி கொள்கிறார்கள்.. உண்மையில் அவருடைய குடும்பத்தில் இருந்து யாருமே விளையாட்டு துறை மந்திரியாக இல்லாததால்தான் இந்த வெற்றி !! சசி!! ஹெலிகாப்ட்டர் ரெடியா!! கொடநாட்டுக்கு விடு !!!

தமிழ் குடி தாங்கி மருத்துவர் இராமதாஸ்
இந்த வெற்றியை கொண்டாட முடியவில்லை!! இந்த அணியிலே வன்னியர் ஒருவர் கூட இடம் பெறவில்லை.. ஆகவே வன்னியர்களுக்கு அணியிலே இட ஒதுக்கீடு கோரி பிரதமர் அவர்களுக்கு அனைவரும் ஒரு கோடி தந்திகள் அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்..

 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு 
 இது கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!! அன்னை சோனியாவின் நல்லாசியும், பிரதமர் அவர்களின் முயற்சியுமே இந்த வெற்றிக்கு காரணம்!! தலைவர் கலைஞர் அவர்களின் ஒத்துழைப்பை இந்த நேரத்திலே பாராட்ட கடமைபட்டிருக்கிறோம்... 2012 காமராஜர்  ஆட்சி அமைப்போம் அப்போதும் கபடி அணி வெற்றி பெறும்!!!  


பின் குறிப்பு:-
ரொம்ப நாள் இடைவெளிக்கு பிறகு எழுதிய பதிவு பின்னூட்டம் போட்டு தொடர்ந்து எழுத ஊக்கம் கொடுங்கள் நண்பர்களே!!!

2 comments:

Karthik said...

sooper, ungal kalai sevai thodarattum!!!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in