Thursday, April 9, 2009

தேடல்


சலனங்களால் மோகம்
வந்து அடிக்கடி தேகத்தை சூடேற்றியது


சில இடறல்களில்
மனம் வெறி கொண்டு
அலைந்தது


கண்கள்
தேடித்தேடி
எதையோ வெறித்துக்கொண்டிருக்கிறது


யாரைப் (எவளைப்) பார்த்தாலும்
சில நிமிடங்களில்
வாழ்க்கை ஒத்திகை பார்த்தது மனம்


மனிதனே இப்படித்தானோ??
எப்போதும் எதையாவது
தேடிக்கொண்டே....


தேடலுக்கு
அர்த்தம் தேடுகின்றேன்


மோகம் தீர்க்க ஒரு துணை வந்தால் கிடைக்குமோ ??
தேடித்தவிக்கும் இரு கரங்களுக்குள்
அடங்கினால் கிடைக்குமோ ??
தோழமையுடன் எண்ணங்கள்
பகிர்ந்தால் கிடைக்குமோ ?


அனைத்தும் கிடைத்தாலும்
வேறு ஏதாவதொன்றைத்
தேடத்தொடங்கும் மனது


முற்றும் துறந்தவரும்
தேடியலைந்து கிடைக்காதது
நான் தேடக் கிடைக்குமோ ??


தேடலுக்கு அர்த்தம்
இன்னும் தேடுகின்றேன்.........


பின்குறிப்பு :
யார் நம்மைப்பார்த்து புன்னகைத்தாலும் காதல் என்று எண்ணிக்கொண்டு பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்து திரிந்த
கல்லூரி நாட்களில் விடுதி அறையில் சன்னலோரத்தில் பிரசவித்த கவிதை. அழகப்பா பல்கலை விடுதி சன்னலில் இருந்து பார்த்தால் MSW, Women Studies பிரிவுகளின்
பட்டாம் பூச்சிகள் நடந்து வருவது தெரியும்.....

1 comment:

Anonymous said...

ungal thedal varigal nandraga irunthathu..arumai!!! i feel it's a fact of life... Man keeps searching for some or the other thing in his life nu i feel...