Friday, March 13, 2009

ஆளில்லாத கடையில (ஐ டி கம்பெனி) டீ ஆத்துவது எப்படி ?

ஆளில்லாத கடையில ( டி கம்பெனி) டீ ஆத்துவது எப்படி ?





அமெரிக்காவில பொருளாதார சரிவு அதனால நிறைய மென்பொருள் கம்பெனிகள மூடிட்டாங்க !! ஆட்குறைப்பு நடவடிக்கைகள் !! சிக்கன நடவடிக்கைகள் !! சம்பளம் கட் !! இப்படி எங்க திரும்பினாலும் படுத்தறாங்கப்பா !! முடியல !! இப்பவே கண்ண கட்டுதே!!

இந்த வாரம் என்ன ஆணி புடிங்கினே?? அப்படின்னு நம்ம மேலாளர் கேட்டா? முதல் வாரத்துல புடிங்கின ஆணியவே சொல்ல வேண்டியிருக்கு. அவரும் சளைக்காம அது போன வாரம் நான் கேட்கறது இந்த வாரம் அப்படின்னு வடிவேல் ரேஞ்சுக்கு நம்மள வெச்சு காமெடி பண்றாரு... அவருக்கும் பெருசா புடுங்க தேவையில்லாத ஆணி எதுவும் இல்லைன்னாலும் நம்ம மேல மட்டும் கொல வெறி !!!


சரி என்னதான் நம்ம செக்யுரிட்டி கேட் திறக்கும்போது
ஆபிசுக்கு வந்திட்டு எட்டு மணி நேரம் கழிச்சு போனாலும் சும்மாவே உட்கார்ந்துட்டு என்ன ஆணி புடுங்கறே? அப்படின்னு நம்ம மேலாளர் கேட்கத்தானே செய்வாரு!!!

இதையெல்லாம் சமாளிக்க என்ன செய்யலாம்னு நம்ம ஆபிசுக்கு பக்கத்தில இருக்கற பார்க்குல மல்லாக்க படுத்து வானத்த பார்த்து யோசிச்சதுல சில யோசனைகள் அருவி மாதிரி கொட்டுச்சு. சரி இதை சமூகத்துக்கு அறிவிச்சிடுவோம்..

1. காலையில ஆபிசுக்குள்ள நுழஞ்சதுல இருந்து மத்தியானம் சாப்பிட போற வரைக்கும் சீட்ட வுட்டு எந்திரிக்காதீங்க. டீ குடிக்க போனா கூட டீய எடுத்திக்கிட்டு சீட்டுக்கு வந்திடுங்க. அப்பத்தான் எல்லாரும் நம்ம பிசியா இருக்கறதா நினைப்பாங்க..

2. வெட்டியா யாரு கிட்டயும் போயி அரட்டை அடிக்க வேணாம் அதுவும் மேலாளர் கண்ணுல படர மாதிரி வேண்டவே வேண்டாம்.


3. ஏதாவது ஒரு ப்ரீ டெஸ்ட் இல்ல ஆபிசுல டிரெனிங் ஏதாவது வந்திச்சுன்னா முத ஆளா போய் நின்னிடுங்க.

4. புதுசா ஒரு டாபிக்க படிச்சிட்டு ஒரு டிரெயினிங் எடுங்க, முக்கியமா மறக்காம டீமுல இருக்கிற ஜூனியர் பசங்களா பார்த்து கூப்பிடுங்க (அவங்கதான், அதிகமா கேள்வி கேட்க மாட்டாங்க ) மறக்காம மேலாளர ஆப்ஷனல் அட்டென்டியா சேர்த்துடுங்க.

5. எல்லாருமே மறந்து போன பழைய பிரச்சினை எதாவது கண்டிப்பா எல்லா புராடக்லயும் இருக்கும், அத தேடி கண்டு பிடிச்சு முடிஞ்சா சரி பண்ணிட்டு நல்ல பேர தட்டிக்கிட்டு போயிடுங்க ( பிரச்சினைய சரி பண்ணினதுக்கு அப்புறம் எல்லோருக்கும் சொல்லுங்க முன்னாடியே சொல்லி தேவையில்லாத பிரச்சினையில மாட்டிக்காதிங்க!!! )

6. முதல்ல இருக்கிற கோட இம்ப்ரூவ் பண்ண எதாவது ஐடியா குடுங்க. பெர்பாமன்ச அதிகப்படுத்த முடியுமான்னு பாருங்க!!!

7. அதிகமா லீவு எடுக்காதிங்க, கடையில ஆளே இல்லையின்னாலும் டீ ஆத்தரது ரொம்ப முக்கியம்.

8. நம்ம புராஜெக்டுக்கு இன்டர்னல் வெப்சைட் பண்றது, பில்ட் டைய்ம குறைக்கறது இப்படி எதாவது நமக்கு நாமே ஆணிகளை ஏற்படுத்திக்க வேண்டியதுதான்.


9. அடிக்கடி மேலாளர் கிட்ட போய் அடுத்த வேல எப்ப வருதுன்னு கேட்டு , நமக்கு வேல இல்லன்னு ஞாபகப்படுத்தாதிங்க.

10. பெரிய தலை யாராவது வந்தா ஊர் கூட்டம (all hands meet, town hall meet,etc) போடுவாங்க இல்லையா ? அதுக்கு தவறாம போயிடுங்க!! அப்பதான் கப்பல் எப்ப மூழ்கப்போகுதுன்னு தெரியும்.


இதெல்லாம் ஒரு ஐடியாதான்.. இதுக்கெல்லாம் தேவையில்லாம கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகி நிறைய ஆணி புடுங்கற வேல எல்லோருக்கும் கிடைக்கணும்னு ஆத்தாவ வேண்டிக்கிட்டு ஒரு குலவைய போடுங்க.. சீக்கிரமா கண்ணை தொற ஆத்தா !!!! உ லு லு லு லு !!!!!!




கொஞ்சம் காமெடியா எழுதலாம்னு ஆரம்பிச்சு கடைசியில சீரியசா ஆகிப்போச்சு எல்லாரும் மன்னிக்கணும்.

* பின் குறிப்பு :
உங்க மேலாளர் கிட்ட இந்த பதிவ காட்டிராதிங்க !!!



20 comments:

Anonymous said...

நீங்க சொன்ன ஐடியா - வில் பாதி ஏற்கனவே Follow பண்றேன். இனி மற்றதையும் கடைபிடிக்கிறேன்..
வேற வழி.

நையாண்டி நைனா said...

மாப்ளே... உன்னோட பதிவே... படிச்சேன்...
சூப்பரா இருக்கு...


நான் பாலோ பண்ணாலாம்னு நெனைச்சா

எங்க டாமேஜரும் இந்த தளத்தை ஓபன் பண்ணி வச்சி சீலிங்கை பார்த்து பீலிங்கோட சொட்ட மண்டைய சொறிஞ்சிகிட்டு இருக்காரு.

Mahesh said...

நல்லா யோசிக்கிறீங்கப்பூ !!!

நல்லாவே இருக்குண்ணே பதிவு. கலக்குங்க..

dondu(#11168674346665545885) said...

வருடம் 1986. சற்றும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் எனக்கு ஐ.டி.பி.எல் கார்ப்பரேட் அலுவலகத்திலிருந்து பக்கத்து வளாகத்தில் இருந்த ஐ.டி.பி.எல் குர்கான் தொழிற்சாலைக்கு மாற்றம் வந்தது. அப்போது நான் உதவி மின் பொறியாளர் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராகப் பணி புரிந்து வந்தேன். அதே நேரத்தில் தொழிற்சாலையில் என்னுடைய ரேங்கிலேயே இன்னொரு உதவி மின்பொறியாளர் இருந்தார். ஆனால் என் சீனியாரிட்டி அவருடையதை விட அதிகம். ஆகவே அவர் என் கீழ் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம்.

அதுவும் அது வரை நான் வெறும் மொழிபெயர்ப்பு வேலைகள்தான் பார்த்து வந்தேன். ஜெனெரேட்டருக்கான வேலைகளை துவக்கி, நடாத்தி, முடித்துக் கொடுத்தது ஒரு விதிவிலக்காகவே பார்க்கப்பட்டது. அது வேறு அவருக்கு கடுப்பு. எங்கள் மேலதிகாரியிடம் போய் தன் செல்வாக்கைப் பயன்படுத்தியிருக்கிறார்.

விளைவு நான் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்த உடனேயே என்னைத் தலைமையகத்தில் உள்ள விளக்குகள், மின் விசிறிகள் முதலியவற்றைப் பார்த்துக் கொள்ளுமாறும் நான் இருக்க வேண்டிய இடமும் அதுதான் என்றும் கூறி திருப்பி அனுப்பிவிட்டார்கள். சம்பளம் மட்டும் தொழிற்சாலை கொடுத்து விடும். இப்படியாக மின் பிரிவில் மிக அதிக சீனியாரிட்டி உள்ள நான் ஒரு சாதாரண மேற்பார்வையாளன் செய்யக் கூடிய வேலையைச் செய்ய வேண்டியதாயிற்று. நான் என்ன செய்தேன்? பேசாமல் திரும்பி வந்தேன். என்னுடைய பழைய மேஜை நாற்காலிகள் எனக்கு கொடுக்கப்பட்டன. உதவிக்கு ஒரு எலெக்ட்ரீஷியன், ஒரு ஹெல்பர் மட்டுமே. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு நாள் வேலை பத்து நிமிடங்களில் முடிந்து விடும். சந்தோஷமாக மீதி நேரங்களில் என் வெளி மொழிபேயர்ப்பு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தேன். தில்லி முழுக்க எனக்கு வாடிக்கையாளர்கள். அவர்கள் கொடுக்கும் வேலைகளை ஹாய்யாகச் செய்து கொண்டிருந்தேன். நல்ல பிராக்டீஸ், நல்ல அனுபவமும் கூடக் கிடைத்தன. என்னைக் கண்காணிக்க வேண்டியவர்கள் தொழிற்சாலையில், நான் இருப்பதோ தலைமை அலுவலகத்தில். அங்கு இல்லையென்றால் தொழிற்சாலையில் இருப்பதாக இவர்கள் நினைத்துக் கொள்ள ஒரே தமாஷ்தான் போங்கள். இந்தக் கண்ணாமூசி 6 வருடம் நீடித்தது.

ஐ.டி.பி.எல் அப்போது தன் வீழ்ச்சியை நோக்கிப் போய்கொண்டிருந்தது. கைவசம் ஆர்டர்கள் ரொம்ப இல்லை. பலரும் வேலை நேரத்தில் பொழுதுபோகாமல் வம்பு பேசிக் கொண்டிருந்தனர். தன் இடத்தில் அமர்ந்து வம்பு பேசாமல் வேலை செய்பவர்கள் மிகச்சிலரே. அவர்களில் நானும் ஒருவனாக இனம் காணப்பட்டதுதான் பெரிய தமாஷ். எப்போதும் உட்கார்ந்து எதையோ பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருந்தது பலரை இம்ப்ரெஸ் செய்தது.

எங்கள் மேனேஜருக்கு மட்டும் என் மேல சிறிது சம்சயம் என்று நினைக்கிறேன். வேறு ஒன்றும் இல்லை, நான் ஆஃபீசுக்கு வராமல் எங்காவது மட்டம் அடித்து விடுகிறேனா என்றுதான். ஆகவே தினமும் தான் காலையில் வேலைக்கு வந்ததும் என்னை இண்டர்காமில் கூப்பிட்டு ஏதாவது பேசி அறுப்பார். நானும் சமயம் கிடைத்தது என்று அவரைப் போட்டு எதிர்மரியாதையாக அறுத்து விடுவது உண்டு.

வருடம் 1987. எம்.ஜி.ஆர். அவர்களது இறுதிச் சடங்குகள் நடந்த தினத்தன்று ஐ.டி.பி.எல். கார்ப்பரேட் ஆஃபீஸில் திடீரென காலை 10 மணிக்கு அமைச்சகத்திலிருந்து வந்த தகவல்களின்படி விடுமுறை அறிவிக்கப்பட்டது. மொத்தம் 5 பஸ்கள் ஸ்டாஃபுகளுக்காக. அடுத்த 5 நிமிடத்தில் எல்லோரும் பஸ்களில் ஏறிக் கொள்ள, கட்டிடமே காலியானது. நான் மட்டும் என் சீட்டில் இருந்து கொண்டு எனது மொழிபெயர்ப்பு வேலைகளைத் தொடர்ந்தேன். அடுத்த நாளிலிருந்து நான் பத்து நாட்கள் லீவில் போகவிருந்தேன். ஆகவே கையில் இருக்கும் வேலையை முடிக்க வேண்டுமே என்ற அவசரம் வேறு.

எண்ணி ஐந்தாவது நிமிடம் இண்டர்காம் ஒலித்தது. எடுத்துப் பேசினால் மேனேஜர். அவர் நான் இன்னும் என்னிடத்தில் இருப்பதைப் பார்த்து வியப்படைந்தது போல இருந்தது. சாதாரணமாகப் பேசுவது போல நினைத்துக் கொண்டு என்னெனாவோ சம்பந்தம் இல்லாத கேள்விகள். பிறகு கார்ப்பரேட் ஆஃபீஸ் நிலவரம் பற்றிக் கேட்க எல்லோரும் வீட்டுக்குப் போய் விட்டதைக் கூறினேன். நான் ஏன் இன்னும் அங்கேயே இருக்கிறேன் என்பதை கடைசியில் கேட்க, பிளாண்டுக்கும் லீவா என்று "ஆச்சரியத்துடன்" நானும் கேட்டேன். சிறிது நேர மௌனம். அவருக்கு பின்னால் லாம்பா என்னும் ஆஃபீஸர் "ராகவன் போயிருக்க மாட்டான் என்று நான் கூறியது சரியாகப் போய் விட்டது பார்த்தீர்களா" என்று கேட்டது மேனேஜர் டெலிபோன் மவுத் பீசை சரியாக மூடாததால் எனக்குத் தெளிவாகக் கேட்டது.

"உங்களைப்போல் எத்தனைப் பேரை நான் பார்த்திருக்கிறேன்" என்று நான் நினைத்தேன், ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. இன்னும் சற்று நேரம் அறுத்து விட்டு, பேச்சை முடித்து கொண்டார் மேனேஜர். நானும் விறுவென்று மூட்டை கட்டிக் கொண்டு, கீழே வந்து, என் சைக்கிளில் ஏறி வீடு நோக்கி விரைந்தேன்.

இது எப்படி இருக்கு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஆயில்யன் said...

//.. இதுக்கெல்லாம் தேவையில்லாம கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகி நிறைய ஆணி புடுங்கற வேல எல்லோருக்கும் கிடைக்கணும்னு ஆத்தாவ வேண்டிக்கிட்டு ஒரு குலவைய போடுங்க.. சீக்கிரமா கண்ணை தொற ஆத்தா !!!! உ லு லு லு லு !!!!!!//


சூப்பரூ
றீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய் :))))

ஆயில்யன் said...

//நம்ம ஆபிசுக்கு பக்கத்தில இருக்கற பார்க்குல மல்லாக்க படுத்து வானத்த பார்த்து யோசிச்சதுல //

இதை மட்டும் அடிக்கடி செய்யாதீங்க :)

நசரேயன் said...

பத்து தான் இருக்கா?
அப்படியே பாகம் ரெண்டு போட்டு இன்னொரு பத்தையும் போடுங்க

Santhosh said...

முக்கியமான மேட்டரு பதிவு எழுதுறேன் பின்னூட்டம் போடுறேன் மெயில் செக் பண்றேண்ணு internetல இருக்குறது... இதை கண்டிப்பா தவிர்க்க வேண்டும்..

விவேக் said...

முதலில் பின்னூட்டம் போட்ட அனைவருக்கும் என் நன்றிகள், நம்ம பதிவுக்கும் இவ்வளவு வரவேற்பா ?? நினைக்கவே மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

விவேக் said...

/*Jeeva said...

நீங்க சொன்ன ஐடியா - வில் பாதி ஏற்கனவே Follow பண்றேன். இனி மற்றதையும் கடைபிடிக்கிறேன்..
வேற வழி.
*/

நன்றி நண்பரே, இன்னும் எதாவது யோசனைகள் வந்தால் தெரிவிக்கிறேன்

விவேக் said...

/*நையாண்டி நைனா said...

மாப்ளே... உன்னோட பதிவே... படிச்சேன்...
*/

நன்றிங்க மச்சான் !!


/* எங்க டாமேஜரும் இந்த தளத்தை ஓபன் பண்ணி வச்சி சீலிங்கை பார்த்து பீலிங்கோட சொட்ட மண்டைய சொறிஞ்சிகிட்டு இருக்காரு.*/

ஒரு வேளை உங்க டாமேஜரும் அடுத்து என்ன டிரெயினிங் எடுக்கலாம்னு யோசிக்கறாரோ ?

விவேக் said...

/*
Mahesh said...

நல்லா யோசிக்கிறீங்கப்பூ !!!

நல்லாவே இருக்குண்ணே பதிவு. கலக்குங்க..
*/

நன்றி மகேஷ் தம்பி

விவேக் said...

/*
இது எப்படி இருக்கு?

அன்புடன்,
டோண்டு ராகவன்
*/

கொஞ்சம் நீளமா இருக்கு , இதுக்கு பேசாம ஒரு பதிவே போட்டிருக்கலாம்

விவேக் said...

/*ஆயில்யன் said...
நம்ம ஆபிசுக்கு பக்கத்தில இருக்கற பார்க்குல மல்லாக்க படுத்து வானத்த பார்த்து யோசிச்சதுல //

இதை மட்டும் அடிக்கடி செய்யாதீங்க :)*/

என்ன பண்றது , நமக்கு பக்கத்திலேயே நம்ம டேமேஜரும் மல்லாக்க படுத்திருக்காரே !!!!

விவேக் said...

/*
Blogger நசரேயன் said...

பத்து தான் இருக்கா?
அப்படியே பாகம் ரெண்டு போட்டு இன்னொரு பத்தையும் போடுங்க

*/

நண்பரே,
முயற்சி பண்றேன்

விவேக் said...

/*
சந்தோஷ் = Santhosh said...

முக்கியமான மேட்டரு பதிவு எழுதுறேன் பின்னூட்டம் போடுறேன் மெயில் செக் பண்றேண்ணு internetல இருக்குறது... இதை கண்டிப்பா தவிர்க்க வேண்டும்..
*/
ஆஹா !! இப்பவே கண்ண கட்டுதே !! இது தெரியாம இந்த பதிவ நம்ம டாமேஜருக்கும் அனுப்பிட்டனே !!!

VIKNESHWARAN ADAKKALAM said...

சூப்பரு.... ஆத்தா கண்ணு தொறக்க நானும் அப்லிகேஷன் போட்டுக்கிறேன் சாமியோவ்...

விவேக் said...

/*
VIKNESHWARAN said...

சூப்பரு.... ஆத்தா கண்ணு தொறக்க நானும் அப்லிகேஷன் போட்டுக்கிறேன் சாமியோவ்...
*/
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா!!

Suresh said...

i got this as a forward... searched in google neenga than eluthinigala super a iruku nanum follow panran,

pinkuripa maranthu enga manger ku anupitaen ;-( av

Suresh said...

ana pavi pasanga unga blog address a cut panitanga .. i searched in google and came to ur site